கொழும்பு – கண்டி வீதியில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மேம்பாலத்திற்கு மத்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















