ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) அறிவித்தபடி, நெமுரோ தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
JUST IN: Another one, this time M6.1, same area of interest, northeast Japan. pic.twitter.com/KTOtCuZyoh
— 🇨🇦Canadian🇺🇸earthquake🇧🇷researcher🇯🇲 (@mxdondevivo) June 21, 2025