ஹொரணை – கொழும்பு வழித்தடம் இலக்கம் 120இல் இயங்கும் தனியார் பேருந்துகள் இன்று (25) சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளன.
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல், மில்லேவை ஹொரணை வழியாக கொழும்பு வரை புதிய பேருந்து சேவையை ஆரம்பிக்க முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக குணசிறி கூறுகையில், இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் ஏனைய வழிடத்தடத்தையும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
வேலைநிறுத்தத்தால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஹொரணை – கொழும்பு பாதையில் உள்ள நேர அட்டவணைப் பதிவாளர்கள் முறையாக கடமைகளை ஆற்றாததுடன், அநியாயமாகவும் சட்டவிரோதமாகவும் பணம் வசூலிக்க முயற்சிப்பதாகவும், இதற்கு உரிய தீர்வு வழங்குமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



















