யாழ். புலோலி தெற்கு கூவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் விழுந்து மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புலோலி தெற்கு கூவில் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தராவார்.
தனியார் மருந்தகம் ஒன்றில் கடமையாற்றும் மேற்படி குடும்பத்தார் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் (29) கடலில் விழுந்துள்ளதுடன் மாலையில் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்



















