கேகாலையில் நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஸ்னாகல பகுதியில் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் நூரிய பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
நூரிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் நூரிய – பஸ்னாகல பகுதியை சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 10.6 கிராம் அமோனியம் சல்பேட், 20.3 கிராம் பிளாஸ்டர் பவுடர் மற்றும் 7.5 கிராம் மோட்டர் ஜெல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நூரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















