நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலயமொன்றில் கும்பாபிஷேகத்தையொட்டி 30 இற்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் மூலம் அதிக ஒலி மேற்கொள்ளபட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு பொதுமக்கள் இது குறித்து முறையிட்டுள்ளனர்.
தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அரசாங்க அதிபர் இது குறித்து நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் ஒலிபெருக்கிகளை கழற்றி சென்றுள்ளனர்