கற்பிட்டி கல்லடி கடற் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்டவிரோதமாக கொண்டுச் சென்ற இரண்டு நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது, கைதான சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 673 கிலோகிராம் கடலட்டைகளும் டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்கள் 37 மற்றும் 49 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் டிங்கி படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.