இன்று (07) கொழும்பு – பொரளை பகுதியில், விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்காக, இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று பிற்பகல் 3 மணிமுதல், இரவு 9 மணிவரை, வோட் ப்ளேஸ், கின்சி வீதி சந்தியிலிருந்து நந்ததாச கோத்தாகொட சந்திவரை, கனகரக வாகனங்கள் பயணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



















