கனடாவின் சஸ்கச்வானில் 49 லட்சம் சட்டவிரோத சிகரட்கள் மற்றும் 247 கிராம் ஓபியம் போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ஒண்டேரியோ மாகாணத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவருக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஒண்டேரியோவில் இருந்து பிரிட்டிஷ் கொலம்பியாக பயணித்துக் கொண்டிருந்த ஒரு டிராக்டர் டிரெய்லரை போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர்.
அந்த டிரெய்லரை சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமான ஓபியம் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ட்ரக் வண்டியில் பயணிணத்த நபரும் சாரதியும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.




















