கனடாவில் விமானம் மோதியதில் 16 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளாகி கீழே வீழ்ந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சேகொக் படகுத்துறையில் இருந்த சிறுவன் மீது விமானம் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இந்த விபத்தில் விமானிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படகுத்துறையில் தரித்து நின்ற படகு ஒன்றின் மீது விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




















