திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரியா வத்த சுமத்ராகம கரையோர பகுதியில் சட்ட விரோத கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தகவலறிந்து குறித்த பகுதிக்கு நேற்று மாலை கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவகர் சகிதம் சென்று கட்டிடம் தொடர்பான நிலவரங்களை ஆராய்ந்துள்ளனர்.
இந்நிலையில் உரிய நபர் சட்டவிரோதமான முறையில் இக் கட்டிடத்தை அமைந்துள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து குறித்த கட்டிட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.



















