இஸ்ரேல் உணவுவிநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நான்குவயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்பெற்றுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினி காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அமைச்சு , இது அந்த பகுதியில் நெருக்கடி நிலை மேலும் மோசமடைவதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.




















