இலங்கைக்கு வருகை தந்திருந்த இணையவழி மோசடியுடன் தொடர்புடைய சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று (24) நாடு கடத்தப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சீன பிரஜை ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த சீன பிரஜை நேற்று (23) மாலை 05.10 மணியளவில் மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது இந்த சீன பிரஜையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் உள்ள வர்த்தகர் ஒருவரை சந்திப்பதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், இந்த சீன பிரஜை இணையவழி மோசடியுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளார்.



















