குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கடந்த சில காலமாகவே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஜாய் கிரிஸில்டாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். இவர்களுடைய திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்று முடிந்துள்ளது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இந்த தம்பதிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
6 மாதம் கர்ப்பம்
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக குட் நியூஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “Baby loading 2025, We are pregnant, 6th month of pregnancy” என தெரிவித்துள்ளார். திருமண வாழ்த்துடன் சேர்த்து இவர்கள் இருவருக்கும் நல்லபடியாக குழந்தை பிறக்க ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.




















