50கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய வெளிநாட்டவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் செல்லுபடியாகும் விசா இல்லாமல் நாட்டில் வசித்து வருவது மேலும் தெரியவந்தது.
பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















