ஓய்வூதிய நிலுவைத் தொகைகளில் சுமார் 90% தற்போது செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு (Ministry of Public Administration, Provincial Councils and Local Government) தெரிவித்துள்ளது.
மேலும், மீதமுள்ள 10% இந்த மாதத்துக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த மாதம் ஓய்வூதியத்துடன் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பாதீட்டில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து ஓய்வூதிய நிலுவைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், தகுதியுள்ள பல ஓய்வூதியதாரர்கள் ஆரம்ப கட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் தங்கள் கொடுப்பனவுகளைப் பெற்றதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்திருந்தார்.



















