இலங்கை – இந்திய கடற்படைகளுக்கு இடையிலான வருடாந்த இருதரப்பு கடல்சார் பயிற்சி நடவடிக்கை நாளைய தினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளன.
இதற்காக இலங்கை – இந்திய கடற்படைகளின் விசேட கப்பல்கள் பயன்படுத்தப்படவுள்ளதுடன், 12 உலங்கு வானூர்திகளும் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




















