2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்க எதிர்க்கட்சி முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்க பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சியின் செயற்பாட்டை அவர், ராஜபக்சவின் நிர்வாகத்தின் செயல்களுடன் ஒப்பிட்டுள்ளார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜயதிஸ்ஸ, பதவி அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்தார்.
முன்னைய நாடாளுமன்ற அல்லது ஜனாதிபதி விசாரணைகளின் போது, ஜயசேகரவின் பெயர் எழுப்பப்படவில்லை என்று கூறிய அவர், எதிர்க்கட்சியின் கோரிக்கைகளின் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
இது, உண்மையான சூத்திரதாரி மற்றும் உண்மையான குற்றம் சாட்டப்பட்டவர் என்பதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.



















