ஹபரனை -திருகோணமலை வீதியில் உள்ள தலபத் கந்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 20 ஏக்கர் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீவிபத்து 121வது கிலோமீற்றர் தூண் அருகே ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபரனை வனத்துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.



















