யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் வழங்கப்பட்ட நிலையில், 32 ஆவது நாளுடன் குறித்த அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதன்போது, 147 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், 133 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















