மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமி மலை ஸ்ரஸ்ப்பி தோட்டம் மற்றும் அந்த தோட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களில் பாரிய சுற்றிவளைப்பு மேற் கொண்ட போது சட்ட விரோதமாக கசிப்பு தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து நேற்று (22) கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 95 லிட்டர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு மஸ்கெலியா பொலிஸாரால் ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.
நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட வேலையில் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டுதலா 15000/= தண்டம் பணம் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.



















