ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு நேற்று (25) இரவு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.
ஜி.எல். பீரிஸ், தலதா அத்துகோரல, அலி சப்ரி உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏனைய தூதரகங்களுக்கும் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு கவலை வௌியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



















