முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குப் பிணை கோரிய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவரது சட்டத்தரணிகள் கூறிய காரணங்கள் , ரணிலின் அரசியல் எதிர்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த,
இதற்கிடையில், ரணில் கைது செய்யப்பட்டபோது கூட்டு எதிர்க்கட்சியாக ஒன்று சேர்ந்தவர்களே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டிற்கு உண்மையிலேயே அரசியல் தலைமை தேவைப்படும்போது அவர்களால் தங்களை ஒன்றிணைக்க முடியாதது அவமானகரமானது என்றும் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மேலும் கூறினார்.



















