யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளில் சிலவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 படகுகளை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
உரிய பாதுகாப்பு செயற்பாடுகளை பின்பற்றி படகுகள் வெளியேற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மயிலிட்டி துறைமுகத்தில் இந்திய கடற்றொழிலாளர்களின் சுமார் 123 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 48 படகுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள படகுகளில் 07 படகுகளை தமிழகத்திற்கு எடுத்துச் செல்ல இந்திய கடற்றொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தநிலையில் அரசுடமையாக்கப்பட்ட 68 படகுகளும் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 01 ஆம் திகதி மயிலிட்டி துறைமுகத்தை பார்வையிடச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















