வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்படும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு மே மாதம், காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் கோட்டாபயவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்பதாக அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் வெளியாகாத நிலையில், அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவடைந்ததையடுத்து வாக்குமூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



















