காலி – மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து நேற்று (03) காலை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
மஹமோதர பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய முதிவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 02 ஆம் திகதி இரவிலிருந்து முதியவர் காணாமல்போயுள்ளதாக முதியவரின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















