இலங்கைக்கு சுற்றுலா விசாவை பயன்படுத்தி வருகை தந்து சொகுசு ஹோட்டல் மற்றும் உணவகம் நடத்திய ரஷ்ய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய ரஷ்ய பெண் ஒருவரே உனவட்டுன சுற்றுலா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த ரஷ்ய பெண் சுற்றுலா விசாவை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தந்து காலி – உனவட்டுன பிரதேசத்தில் சொகுசு ஹோட்டல் மற்றும் உணவகம் ஒன்றை நடத்தி வந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட ரஷ்ய பெண் மேலதிக விசாரணைகளுக்காக ஹபராதுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் கைதான ரஷ்ய பெண் காலி நீதவான் நீதிமன்றில் நாளை (05) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



















