கம்பளையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, நேற்றிரவு (04) இரவு 11:00 மணியளவில் வட்டவளை பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மற்றும் 4 மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகள் முச்சக்கரவண்டியில் பயணித்திருந்தனர்.
தாயும் இரு குழந்தைகளும் சிறு காயங்களுடன் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வளைந்த வீதியில் முச்சக்கர வண்டியைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்குக் காரணம் என ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















