மற்ற உணவுகளை விட நாம் பழங்கள் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் இதிலுள்ள சத்துக்கள் எப்போதும் நம்மை இளமையாகவே இருக்க உதவிச் செய்கிறது.
அப்படி மனிதர்களுக்கு ஏகப்பட்ட பலன்களை கொடுப்பது தான் பப்பாளி பழம். இந்த பழத்தில் மற்ற பழங்களை விட அதிகமான வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. இது செரிமானம், மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை குணமாக்குகிறது.
மேலும், உடல் எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், மற்றும் புற்றுநோய் தடுப்பு போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.
பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபோலேட், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதே சமயம், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
என்ன தான் பப்பாளிப்பழம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுத்தாலும் இதய செயலிழப்பு அல்லது மாரடைப்பு உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஏனெனின் இதய துடிப்பை குறைக்கும் ஆற்றல் பப்பாளி பழத்திற்கு உள்ளது.




















