கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த 2 தனியார் பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்துகள் இரண்டும் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட போது, ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் கினிகத்தேன பகுதியில் வைத்து குறித்த இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு பேருந்துகள் அதிக வேகத்துடன் பயணிப்பதாக பேருந்துகளுக்கு பின்னால் பயணித்த உந்துருளியின் சாரதி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே, குறித்த பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



















