முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை பகுதியில் அரசுக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (8 ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கமைய சந்தேகநபர் இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



















