பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு தொடர்பான இன்றைய பேச்சுவார்த்தை ஆரோக்கியமாக அமைந்தது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பெருந்தோட்ட அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் முதலாளிமார் தங்களது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்கு சம்மேளனம் ஒருமாதகால அவகாசத்தைக் கோரியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.



















