கொழும்பு மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் திட்டங்களை தனது கூட்டாளிகளுக்கு வழங்கி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



















