உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்காலை பெலியத்தவிலுள்ள தனது இல்லத்திற்கு சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பளித்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவர் வெயியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது,



















