எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்தார்.
தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான நமாலி கமகே என்பவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது.



















