ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து டோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை கட்டாருடன் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கட்டாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைகியுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்தநிலையில், அண்மைய தாக்குதல்கள் குறித்து இலங்கையின் கவலைகளை அவர் வெளிப்படுத்தியதாகவும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒற்றுமையை கட்டாருக்கு வெளிப்படுத்தியதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் இஸ்ரேல் பற்றி எந்தக் குறிப்பும் தெரிவிக்கப்படவில்லை.



















