சுற்றுலாப் பயணிகளின் சஃபாரி ஜீப் ரக வாகனத்தை யானை ஒன்று துரத்திவரும் காணொளி ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப் ரக வாகனத்தை தந்தம் கொண்ட யானை ஒன்று துரத்தி வரும் காட்சி தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காட்டு யானைகளைப் பார்வையிடுவதற்கான பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாகக் பொலன்னறுவையில் உள்ள கவுடுல்ல தேசிய பூங்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.



















