இங்கிரிய பகுதியில் உள்ள ஹதபான்கொட – ரத்மல்கொட பகுதியில், வீதியில் நடந்து சென்ற 40 வயதுடைய பெண் ஒருவரின் கண்களில் மிளகாய்த்தூளை வீசிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட நகைகளில் சுமார் 2.1/2 பவுண் எடையுள்ள சங்கிலி, 2 பவுண் எடையுள்ள வளையல், ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் 2,000 மதிப்புள்ள பணப்பை என்பன அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் ஆடை தொழிற்சாலையில் பணிப்புரியும் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஹதபான்கொட பகுதியில் வசிக்கும் ஒரு குழந்தையின் தாயான ஆடைத் தொழிலாளி, 16 ஆம் திகதி இரவு பணியிடத்தால் வழங்கப்பட்ட வாகனத்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து வந்த ஒருவர் அவரது கண்களில் மிளகாய்ப் பொடியை வீசியதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
பின் அந்த நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை எடுக்க முயன்றபோது, குறித்த பெண் இரண்டு நகைகளையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தால், அவர் அந்த பெண்ணை தாக்கிவிட்டு தங்க நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசியை திருடி சென்றதாக தெரிவித்தார்.
நகையை திருடிச் சென்ற நபர் குறித்த பெண்ணுடன் ஒன்றரை வருடங்களாக தொடர்பிலிருந்ததாகவும், அவரிடமிருந்து பிரிந்த பிறகு, அந்த நபர் , அந்த பெண்ணை தொலைபேசி அழைப்பின் மூலம், அவரைப் பழிவாங்குவதாக மிரட்டியதாக ஆடைத் தொழிலாளி காவல்துறையினரிடம் கூறினார்.
குறித்த பெண் கண்களில் மிளகாய்த்தூள் வீசியதால் அந்த நபரை சரியாக அடையாளம் காண முடியவில்லை என்றாலும், ஆடைத் தொழிலாளியின் வாக்குமூலத்தில், அவரது கைகால்கள், தோற்றம் மற்றும் நடக்கும் விதம் குறித்த பரிச்சயத்தின் அடிப்படையில் அவர் தனது முன்னாள் காதலராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



















