நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் வட்டி விகிதங்களுக்கு மத்தியில், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 12,325 புதிய கடன் அட்டைகள் பாவனைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் மாத இறுதியில் 20 இலட்சத்து 75 ஆயிரத்து 744 கடன் அட்டைகள் பாவனையில் இருந்ததுடன், அந்த எண்ணிக்கை ஜூலை மாத இறுதிக்குள் 20 இலட்சத்து 88 ஆயிரத்து 69 ஆக பதிவாகியுள்ளது.
இது ஜூலை மாதத்தில் 0.59 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.
இதேவேளை இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கடன் அட்டைகளின் எண்ணிக்கை 3.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.



















