ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டினால் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் தெவனகல பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் ஹெம்மாத்தகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்



















