கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதி உயிரை மாய்த்துக்கொள்ளுவதற்காக அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காணாமல்போன யுவதியை தேடும் பணிகளில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















