முட்டை பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் ஆகும்.
இது எலும்புகளை வலுப்படுத்தவும், தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
இந்த நிலையில் மக்கள் தற்போது பெரிய பிரச்சனையாக தெிர்கொள்வது எடை அதிகரிப்பு தான். இதற்காக பலரும் பல விதமாக முயற்ச்சிகளை செய்து எடையை குறைக்க முயற்ச்சி செய்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் முட்டையை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் போது அது நமக்கு அழகான உடலை கொடுக்கும். இதை விரிவாக இங்கே பார்க்கலாம்.
முட்டைகளில் உயர்தர புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
புரதம் திருப்தி உணர்வை அதிகரிக்கிறது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர உதவுகிறது மற்றும் தேவையற்ற சிற்றுண்டிகளைத் தடுக்கிறது.
எனவே சரியான நேரத்தில் முட்டைகளை இணைக்கும்போது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் ஆற்றல் சமநிலையை மேம்படுத்தவும் முடியும்.
இதை தவிர நீங்கள் தவறான நேரத்தில் முட்டைகளை சாப்பிடுவது இந்த நன்மைகளை அதிகரிக்காமல் போகலாம்.
முட்டைகளிலிருந்து வரும் ஊட்டச்சத்துக்களை உங்கள் உடல் எப்போது சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்வது எடை இழப்பை மிகவும் திறம்பட அடைய உதவும்.
காலை உணவாக முட்டை – எடை இழப்புக்கு முட்டைகளை சாப்பிடுவதற்கு காலை உணவு சரியான நேரம் என்று ஆராய்ச்சி மூலம் கூறப்படுகின்றது.
காலையில் முட்டைகளை சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்தவும், பிற்பகலில் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவும். புரதச் சத்து திருப்தி ஹார்மோன்களைத் தூண்டி, இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது.




















