இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசியை, அதிக விலைக்கு விற்பனை செய்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காலி கஹவத்தை பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கே, 5 இலட்சம் ரூபாய் அபராதத்தை காலி நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
நிறுவன உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, குறித்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார சபை தெரவித்துள்ளது.
அதன்படி, குறித்த நிறுவனம் 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி கிலோ ஒன்றினை 273 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.



















