இலங்கையின் வரி வருமானம் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், 3,400 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாக, பொருளாதார பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், முதன்மை இருப்பு, ஆண்டு இலக்கை விட 200 பில்லியன் ரூபாயை கடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,545 பில்லியன் ரூபாயை வசூலித்துள்ளதுடன், இலக்கில் 103 சதவீதத்தை அடைந்துள்ளதாகவும் அனில் ஜெயந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.
அதேநேரம், இலங்கை சுங்க திணைக்களம் 1,679 பில்லியனை வசூலித்து, இலக்கில் 113 சதவீதத்தை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மதுவரித்திணைக்களம் 176 பில்லியன் ரூபாயை வசூலித்து, செப்டம்பர் 23 ஆம் திகதிக்குள், இலக்கில் 103 சதவீதத்தை அடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.



















