இலங்கையில் சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குகின்றனர் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனோஷா எதிரிசிங்க, நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது, இலங்கைச் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்கப் பங்கையும் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துவது அவர்களின் குடும்பங்களின் நல்வாழ்வுக்கும் பரந்த சமூகத்துக்கும் அத்தியாவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, பெண்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசரத் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.



















