அரசாங்கத்தின் மின்னணு விசா ஒப்பந்தங்கள் குறித்த தடயவியல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
புதிய முறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை, பழைய முறையை மீட்டெடுக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை விரைந்து நிறைவேற்றத் தவறியதால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரல் ஹர்ச இலுக்பிட்டியவுக்கு, நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்தது.
இதனையடுத்தே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 15 மாதங்கள் கடந்தும், அரசாங்கம் இன்னும் தடயவியல் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.



















