மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்து டன், மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















