அமெரிக்க அரசாங்கம் இன்று (01) அத்தியாவசியமற்ற சேவைகளை (Government Shutdown) மூட நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க செனட்டில் குறுகிய கால நிதி சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிதி ஒப்பந்தம் தொடர்பாகக் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையேயான எதிர் நிலைப்பாடுகளை மாற்ற இயலாமையே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என்று ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக அல்லது அத்தியாவசிய நிதியை வழங்குவதற்கான கடைசி வாய்ப்பாகக் கருதப்படும் குறுகிய கால நிதி சட்டமூலம் செனட்டில் தோல்வியடைந்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் இதற்கு முன்பு 14 சந்தர்ப்பங்களில் இந்த நடவடிக்கையை எடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















