ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றார்.
இவர் அன்பு, காதல் மற்றும் செல்வத்தின் அதிபதியாக இவர் காணப்படுகின்றார். இவரின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் அனைத்து ராசிகளும் மிக முக்கியமானவையாகும்.
தற்போது சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு நகர்கிறார். இந்த பெயர்ச்சி பல ராசிகளுக்கு வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். இந்த சுக்கிர பெயர்ச்சி அக்டோபர் 28 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்தில் இடம்பெறும்.
இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரப்போகிறது. இந்த பதிவில் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப்போவது எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் சிறப்பான மாற்றங்களை அடையப்போகிறார்கள்.
இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.
உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது நிறைவேறும்.
உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும், மேலும் உங்கள் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
வாழ்க்கை துணையுடன் ஒரு நல்ல இணக்கம் வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் அபரிமிதமான வளர்ச்சியை அளிக்கப்போகிறது.
இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகிறது.
இந்த நட்சத்திர பெயர்ச்சியால் வணிகர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
உங்கள் வேலையில் அலுவலகத்தில் உயர் பதவிகளைப் பெறலாம்.
திருமண வாழ்க்கையில், இருந்துவந்த பிரச்சினைகளை இப்போது தீரும்.
மேலும் உங்கள் துணையுடனான உறவு வலுவடையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிப்பார்கள்.
அவர்களின் புதிய முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சரியான நேரம்.
உங்கள் தொழில் வாழ்க்கையில், கடின முயற்சிகள் காரணமாக பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் பிரவேசிப்பது எதிர்பாராத நன்மைகளை கொடுக்கும்.
இந்த சுக்கிர நட்சத்திரப் பெயர்ச்சி வேலையில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் லாபத்தைக் கொடுக்கப்போகிறது.
பதவி உயர்வுகள் மற்றும் வெகுமதிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
இந்த நட்சத்திர மாற்றம் நிதி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இது செல்வத்தைப் பெறவும், நிதிரீதியாக உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.




















