யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (21.11.2025) யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண காவல் நிலைய தலைமைப் காவல்துறை செனவிரட்ன தலைமையிலான குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



















